பக்கம்:கன்னித் தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

கன்னித் தமிழ்


பகற்போது இவை, இராப்போது இவையென் னும் வரையறையைத் தமிழ்ப் புலவர் நன்கறிந்து கூறியுள்ளனர். அந்திக் காலத்தில் மலரும் ஒருவகை மலர் அக் காரணம் பற்றியே அந்திமந்தாசை என்ற பெயர் பெற்றிருக்கிறது. நள்ளிரவில் மலர்ந்து மணக் கும் இருவாட்சிப் பூ இருள் வாசி) நள்ளிருள் நாறி யென்னும் பெயர் பெற்றுள்ளது. கதிரவன் மறையும் பொழுதுக்கு முன்னதாகிய எற்பாட்டில் அந்திமந் தாரை மலர்வதை

வெத்தாறு பொன்னின் அந்தி பூப்ப

என்று அகநானூறு கூறுகின்றது.

மாலைப் பொழுதென்பது சூரியன் மறைந்த பின் னர் இரவின் நடு யாமத்திற்கு முன்னர் உள்ள சிறு பொழுது. அந்தப் பொழுதை வருணிக்கும் புலவர்கள் அக் காலத்தில் மலரும் மலர்களையும் வருணித்திருக் கின்றனர்.

முல்லை மலரும் (குறுந்தொகை)

என்னும் அடி, மாலைப் போதை முல்லைப்போதின் அடையாளத்தால் குறிக்கின்றது. அம் முல்லையோடு செங்காந்தளும் மாலையில் மலர்தலை ஒரு நல்லிசைப் புலவர்,

பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றிச்

சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப்

பறவை பார்ப்புவயின் அடைய

முல்லை முகைவாய் திறப்பப் பல்வ்யின் ,

தோன்றில் தோன்றுபு புதல்விளக் குரு.அ

ஐதுவத் திசைக்கும் அருளில் மாலை . (நற்றிணை) * தோன்றி-செங்காந்தள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/164&oldid=1286037" இலிருந்து மீள்விக்கப்பட்டது