பக்கம்:கன்னித் தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும் - 157

என வெளியிடுகின்றனர். இவற்றையன்றி ஆம்பல், குருக்கத்தி, தளவம் (செம்முல்லை), பிடவு, புன்னை முதலியன மாலைப்போதைக் காட்டும் போதுகளாம். மாலைக்காலத்தில் தாமரை, நெய்தல் முதலிய மலர்கள் குவியும். நள்ளிருளில் நொச்சிப்பூ உதிரும்

பகற் பொழுதிலே பெரும்பாலும் விளக்கமான பலவகை நிறமுள்ள மலர்கள் மலருமென்பதும், இரவில் நல்ல மணமுள்ள போதுகள் மலருமென்பதும் மரநூலார் கண்டறிந்த உண்மை. மரவினத்தின் வளர்ச் சிக்கு வண்டுகள் தாது துதல் இன்றியமையாதது. அவை ஊதி ஒரு மலரிலுள்ள தாதை மற்றாெரு மல. ருக்குக் கொண்டு சென்று வைத்தால் அம்மலர் கரு வுற்றுக் காய்த்துக் கணிகின்றது. அதனுல் மரவினங் கள் பல்குகின்றன. மலர்களின் நிறமும் மணமும் வண்டுகளைக் கவரும்பொருட்டுக் கடவுளால் அமைக் கப்பட்டவை. வண்டுகள் மலரை நிறத்தாற் கண்டு அடை யும் பொருட்டுப் பகற்போதுகள் பல நிறங்களை உடையனவாக உள்ளன; நிறத்தைக் காண இயலாத இரவில் மலர்களின் மணம் வண்டுகளை அழைக்கின்றது; அதனுலேதான் இரவில் மலரும் மலர்களிற் பெரும் பாலன வெண்ணிற முடையனவாக இருக்கும்; அவை பலவகை நிறத்தைப் பெறுவதல்ை ஒரு பயனும் இல்லையல்லவா? இவ்வரிய உண்மையை, இராப் பொழுதை வருணிக்கும் வாயிலாகக் கம்பர் தம் இராமாயணத்திலே, - - -

விரிந்தன. நரந்தமுதல் வெண்மலர் (Priig$$ படலம், 163) என்று புலப்படுத்துதல் பெருவியப்பை உண்டாக்கு கின்றது. - * குறுந்தொகை, 138.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/165&oldid=612866" இலிருந்து மீள்விக்கப்பட்டது