பக்கம்:கன்னித் தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

கன்னித் தமிழ்


சிறுபொழுதுக்குரிய மலர்களைப்போலப் பெரும் பொழுதுகளுள் ஒவ்வொன்றற்கும் உரிய மலர்கள் இன்னவை என்று ஆராய்வதானுல் அவ்வாராய்ச்சி மிக விரியும. அகப்பொருட் பனுவல்களிலே பருவங் களைப் பற்றிக் கூறப்படும் இடங்களிலுள்ள செய்தி களால் இதனை அறிந்து கொள்ளலாம். -

கார்காலத்தில் முல்லை, கொன்றை, கடம்பு, பிடவு, பிச்சி, குருந்து, தெறுழம்பூ முதலியன மலரும். கூதிர்ப் பருவத்தில் முசுண்டையும் பீர்க்கும் மலர்வதாக நெடுநல் வ ைடி உணர்த்துகின்றது. முன்பனிக்காலத்தில் அவரை, ஈங்கை, கருவிளை முதலியன மலரும்; பனிக் காலத்தில் பகன்றை மலரும். இளவேனிற் பொழுதில் அசோகு, கோங்கு, மா, பாதிரி முதலியனவும், இரு வகை வேனிலிலும் இருப்பை, அதிரல் முதலியனவும் மலரும். இம் மலர்களில் சிலவற்றை அவை மலரும் காலத்தைப் புலப்படுத்தும் அடையோடு சேர்த்து வழங்குவதும் சான்றாேர் மரபு.

கார்தறும் கடம்பு (நற்றிணை) கார்தறுங் கொன்றை (புறநானூறு) வேனிற் பாதிரி (குறுந்தொகை) வேனில் அதிரல். (அகநானூறு)

முருக்கின் வகையைச் சேர்ந்த பலாசம் பங்குனி யில் மலருமென்பர் கம்பர்;

பங்குனி மலர்ந்தொளிர் பலாசவன மொப்பார்.

(ஊர்தேடு படலம், 70)

மலைகளில் வாழும் குறவர் வேங்கை மலர் மலர்வ தைக் கண்டு தாம் மணம் செய்தற்குரிய இளவேனிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/166&oldid=1286038" இலிருந்து மீள்விக்கப்பட்டது