பக்கம்:கன்னித் தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி அளப்பது?

சேலம் மாவட்டத்தில் சிறிதளவு தூரம் காவிரி ஒடு கிறது. மிகவும் அகலமான காவிரி. அதன் இரு மருங்கும் உள்ள நிலம் பொன் கொழிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பிற இடங்களைக் காட்டிலும் அந்த இடத்தில் உள்ள நிலத்துக்கு விலை அதிகம். அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலத்தைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

‘இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஓர் ஏகரா நிலம் எவ்வளவு விற்கிறது தெரியுமா?’ என்று கேட் பார் ஒருவர். மற்றவர் செங்கற்பட்டு ஜில்லாக்காரராக இருப்பார். ‘என்ன, அதிகமாகப் போனுல் ஆயிர ரூபாய் இருக்குமா?’ என்பார் அவர்.

‘ஹ ஹ ஹ! நன்றாய்ச் சொன்னிர்கள். உங்க ளுக்கு நிலத்தைப்பற்றிய விவகாரமே தெரியாதுபோல் இருக்கிறது. யுத்தத்துக்கு முன்னலேயே ஏகரா நாலா யிரம் ஐயாயிரம் என்று விற்ற இடமாக்கும்!” -

“என்ன ஐயா, புரளி பண்ணுகிறீர்? நிலமா? இல்லை, வேறு ஏதாவதா?” என்று நண்பர் கேட்பார். “என்ன, ஐயாயிரம் என்று கேட்கிறபோதே வாயைப் பிளக்கிறீர்களே! இப்போது விற்கிற விலை யைக் கேட்டால் உங்களுக்கு மயக்கம் போட்டுவிடும்

போல் இருக்கிறதே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/168&oldid=612875" இலிருந்து மீள்விக்கப்பட்டது