பக்கம்:கன்னித் தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

கன்னித் தமிழ்


அவர்கள் போன பிறகு அவர்களுக்குத் துணை யாக இருந்த தோழி உண்மையை வெளியிட்டாள். அதனைத் தெரிந்துகொண்ட தாய், ஐயோ! இது. முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே அவளை மணம் செய்து கொடுத்திருப்பேனே!’ எ ன் று வருந்தினுள். தன் மகளை நினைக்கும் போதெல் ல்ாம் அவளுக்குத் துயரம் பொங்கியது. மகளைக் கண் மணியைப்போல் வைத்துப் பாதுகாத்து வந்தவள் அவள். அவளுடைய வருத்தத்தைக் கண்ட பெரியோர், “ஏன் அம்மா வருத்தப்படுகிறாய்? பெண் என்று பிறந்: தால் வேறு ஒருவனுக்கு உரியவளாகி அவனுடன் சென்று வாழ்வதுதானே உலக இயல்? இதற்காக வருந்தலாமா? வருந்தாதே’ என்று சொன்னர்கள். அவளுக்கு இந்த வார்த்தைகள் ஆறுதலை உண்டாக்க வில்லை. ஆத்திரந்தான் வந்தது.

“வருத்தப்படாதே என்று சொன்னிர்களே! எனக்கு நாலைந்துபேர்களா இருக்கிறார்கள்? “ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்று பொத்திப் பொத்திக் காப்பாற்றினேன். அவள் நேற்று ஒரு காளையோடு, கடத்தற்கரிய பாலைவனத்தைக் கடந்து போய்விட்டாள். அதை நினைத்தாலே என் நெஞ்சு வேகிறது. என் கண்மணியைப்போல வாழ்ந்தாளே! விசுக்கு விசுக்கென்று அவள் நடக்கும் போது நான் பார்த்து மகிழ்ந்து போவேனே! சின்னஞ் சிறு பெண், இதோ இந்த நொச்சி மரத்தடியிலேதான் விளையாடிக் கொண்டிருப்பாள. இந்தத் திண்ணையில்தான் செப் பையும் பொம்மைகளையும் வைத்து விளையாடுவாள். நொச்சி மரத்தைப் பார்த்தால் எனக்கு அழுகையாக வருகிறது. அவள் இல்லாமல் இந்தத் திண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/178&oldid=1286043" இலிருந்து மீள்விக்கப்பட்டது