பக்கம்:கன்னித் தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை - - 17'1”

வெறிச்சோடிக் கிடக்கிறதே! அதைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா? ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை அல்லவா அவள்?”

இவ்வாறு தாய் தன் வருத்தத்தைக் கொட்டு கிருள்.

ஒருமகள் உடையேன் மன்னே! அவளும் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலே அருஞ்சுரம் நெருதல் சென்றனள்; இனியே, தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடை & Gr! உள்ளின் உள்ளம் வேமே; உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்ன என் அணி இயற் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே. “ஐயோ! ஒரு மகளை உடையவளாக இருந்தேன். அவளும் போரில் மிகுகின்ற வலிமையையும் கூரிய வேலையுமுடைய காளையோடு, பெரிய மலையைச் சார்ந்த கடத்தற்கரிய பால் நிலத்தின் வழியே நேற்றுப் போய்விட்டாள்; இப்போது, உன் வருத் தத்தைப் பொறுத்துக்கொள்’ என்று சொல்கிறீர் கள். அறிவுடையவர்களே! அவள் பிரிவை நினைந் தாலே மனம் வேகுமே. மையுண்ட கண்ணிலுள்ள கருமணியில் வாழும் பாவை நடைகற்றாற்போன்ற அருமைப்பாடும் அழகுமுடைய என் அழகிய இயல் பையுடைய சிறு மகள் விளையாடிய, நீலமணி போன்ற மலரையுடைய நொச்சியையும் திண்ணையையும் கண்டு வருந்தாமல் இருப்பது எவ்வாறு முடியும்?’ எனபது இதன் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/179&oldid=612910" இலிருந்து மீள்விக்கப்பட்டது