பக்கம்:கன்னித் தமிழ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிய 567 189.

ஆதலின் பொருள் நல்லதன்று என்று காட்ட முற்படு கிருன்.

பொருளை ஈட்டி வருகிருேம். அது எவ்வளவு காலத்துக்கு நிற்கும்? பொருள் ஒருவரிடத்திலும் நிலையாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொல் வார்கள். சென்ற சுவடே தெரியாமல் அது கை மாறு: கிறதை உலகில் பார்த்துக் கொண்டேதான் இருக் கிருேம்!

பொருள் நிலையாது என்ற நினைவு வந்தவுடன் அவனுக்கு ஓர் உவமை மனசிலே தோற்றுகிறது. எப்போது பார்த்தாலும் பூ நிரம்ப இருக்கும் பொய்கை ஒன்று அவன் வீட்டுக்கு அருகில் இருந்தது. காலை யிலே தாமரை மலரும்; மாலையில் குமுதம் மலரும். தண்ணிர் நிறைந்து விளங்கியது அந்தப் பூம் பொய்கை, வாடாப் பூவையுடைய பொய்கை அது. எந்தக் காலத்திலும் பூ இருந்து கொண்டே இருக்கும். அதன் நடுவிலே எத்தனையோ மீன்கள் வாழ்கின்றன. அவை ஒடி ஒடி விளையாடுகின்றன. நிலத்தின்மேல் யாராவது ஓடினுல் அவன் அடிச்சுவடுகளைக் கொண்டு எந்த வழியே ஒடின்ை என்று கண்டுபிடிக்க முடியும். பொய்கை நாப்பண் மீன் ஓடும்போது அதன் அடிச் சுவட்டையும் அது சென்ற வழியையும் தெரிந்து கொள்ள முடியுமா? நீரில் எழுதின எழுத்து என்று நிலையாமைக்கு உவமை சொல்வார்கள். அதுவாவது எழுதுபவனுடைய நினைப்பிலே இன்ன எழுத்து என்று இருக்கும். மீன் ஓடினல் நம்மிடம் சொல்லிக் கொண்டு ஓடுகிறதா? இந்த வழியாக ஓடவேண்டும் என்று நினைத்துத் திட்டம் போட்டு ஓடுகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/197&oldid=612974" இலிருந்து மீள்விக்கப்பட்டது