பக்கம்:கன்னித் தமிழ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

கன்னித் தமிழ்


அந்த முடிவுக்கு வந்த பிறகு இப்போது நிதான மாக நினைத்துப் பார்க்கிருன். முன்னலே ஒன்றை யொன்று எதிர்த்து நின்ற இரண்டுவகை எண்ணங் களையும் நிறுத்துப் பார்க்கிருன்.

என்னுடைய ஆருயிர்க் காதலியோடு இடை விடாது இணைந்து வாழ்ந்தால், பொருள் நமக்குக் கிடைக்காது; இவளோடு நாம் புணரின் பொருள் நம்மோடு புணராது. இதை நினைந்து பொருளைத் தேடிக்கொண்டு இவளைப் பிரிந்து சென்றாலோ இவளுடன் இணையும் இன்பம் அந்தக் காலத்திற் கிட்டாது; பொருள் வயிற் பிரியின் இவளோடு புணர்வு புணராது. இந்த இரண்டுக்கும் நடுவிலே, நெஞ்சமே நீ மிகவும் அல்லற்பட்டாய்!”

தன் நெஞ்சைத் தனியாகப் பிரித்து வைத்துப் பேசுகிறவன் போல அவன் சொல்லிக் கொள்கிருன்.

‘என் நெஞ்சே, வாழி! அந்த இரண்டு மாறுபட்ட எண்ணங்களிடையே சிக்கிய நீ பொருள் தேடச் சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, நல்லதாகிய ஒன்றை அடைய வேண்டிய உரிமை உனக்கு உண்டு. நல்லதற்கு உரியை நீ. செல்வது நல்லதா? செல் லாமல் நிற்பது நல்லதா? சற்றுச் சிந்திக்கவேண்டும். பொருளைத் தேடிச் சென்றால் இவள் கூட்டுறவு இல்லை. அப்படி இவளை விட்டுப் பிரிந்து சென்று ஈட்டும் பொருள் நல்லதா?”

அவன் இப்போது வாதத்தில் வெற்றியடைய நிச்சயித்துவிட்டான். பிரியாமல் இருப்பதே நல்லது என்று சாதிக்கும் உறுதி அவனிடம் வந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/196&oldid=1286050" இலிருந்து மீள்விக்கப்பட்டது