பக்கம்:கன்னித் தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிய கண் 187

அவன் மனம்கூட அப்படித்தான் ஊசலாடியது. ஆனல் அவள் விழிகள் அந்தக் குழையை மோதின. ஒர் ஒரத்திலிருந்து கடைக்கண் அளவும் சென்றன. அந்தக் கண்கள்தாம் காதளவும் நீண்டிருக்கின் றனவே! ஆகவே பார்வை ஒருமுறை வெட்டி இழுக் கையில் விழி கணங்குழையோடு மோதியது போலவே இருந்தது. சிவந்த அரிபடர்ந்த கண்ணை அவன் பார்த்தான். அந்தக் கண்ணிலேதான் எத்தனை குளிர்ச்சி மழைக் கண்கள் அவை: சேயரி படர்ந்த மழைக்கண்கள்! அவை கணங் குழையோடு அமர் செய்தன; அப்படி அமர்த்த கண்கள் குழையை மாத்திரம் மோதவில்லை; அவன் உள்ளத்தையும் மோதின. அவள் நோக்கின நோக்கத்தில் இனிமை இருந்தது. விருப்பத்துடன் இனிமை பொங்க. நோக்கின நோக்கந்தான். ஆயினும் அது அவன் நெஞ்சைச் செகுத்தது. மெல்லப் பாயும் தண்ணிய நீர் மணற்குவியலைக் கரைத்து விடுவதில்லையா? அவன் மனத்தில் எழுந்த போராட்டமும் அப்படித்தான் கரைந்து போயிற்று. அவள் தன் கனங் குழையோடு அமர்த்த சேயரி மழைக் கண்ணுல், அமர்ந்து இனிது நோக்கிய நோக்கம் அவனைச் செகுத்தது. ஒரு தடவை மட்டுமா பார்த்தாள்? பலபல கோணத்திலே பார்த். தாள். அத்தனை பார்வைகளும் சேர்ந்து அவனைச் செகுத்தன; பொருள் வேண்டுமென்று எண்ணிய அவன் எண்ணத்தைக் குலைத்தன. “பொருள் எவ்வளவு வகைகளாக, பெரிதாக இருந்தாலும் இருக் கட்டும்; எனக்கு வேண்டியதில்லை. எனக்கு இவளோடு பிரிவில்லாமல் வாழும் வாழ்க்கைதான் வேண்டும்’ என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/195&oldid=612968" இலிருந்து மீள்விக்கப்பட்டது