பக்கம்:கன்னித் தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கன்னித் தமிழ்


இணைந்து வாழும் வாழ்வு இடையிலே இல்லையாகும். இடையீடில்லாமல் அவளோடு வாழ்ந்திருந்தால் அவசியமானபோது பொருள் கிடைக்காது. அவளுடன் இணைந்திருப்பது, பொருளுக்காகப் பிரிந்து செல்வது என்ற இரண்டும் ஒன்றற்கு ஒன்று எதிராக அவன் உள்ளமென்னும் களத்தில் நின்று போர் செய்தன. இரண்டு எண்ணங்களும் ஒன்றுக்கு ஒன்று இளைக்க வில்லை. - -

இப்படி உள்ளக் கடலில் மோதும் எண்ண அலை களினூடே அலைப்புண்டு அவன் தத்தளித்தபோது அவன் காதலி வந்தாள். அவன் எதையோ சிந்தித் துக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். புன் னகை பூத்தபடியே, “எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுகிறீர்கள்?’ என்று கேட்டாள். அந்தப் புன்னகையின் அழகும் அவளுடைய இன்னுரையின் ஓசையும் அவனுடைய எண்ணங்களை நிறுத்தின. அந்த இரண்டுக்கும் மேலே வேறு ஒன்று அவனுடைய போராட்டத்தைப் போக்கியது. அது என்ன?

அவள் புன்னகை மலரப் பேசிய போதே அவள் தன் மோகனப் பார்வையை அவன்மீது வீசினுள். விழிகள் ஒரு முறை கடைக்கண் அளவும் சென்று மீண்டன. பார்வை ஒரு வெட்டி வெட்டி அவன் உள்ளத்தைச் சுண்டி இழுத்தது. அந்த அளவில் அந்த ஆண்மகன் தன் ஆற்றல் அழிந்து எண்ணச் சிதறல்களைத் திரட்டித் துாற்றிவிட்டான். இப்போது அவன் உள்ளம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது.

அவள் பார்த்த பார்வையில் எத்தனை கவர்ச்சி! காதில் கனமான பொற்குழையை அணிந்திருந்தாள். வடிந்த காதில் அது ஊசலாடிக்கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/194&oldid=1286049" இலிருந்து மீள்விக்கப்பட்டது