பக்கம்:கன்னித் தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிய கண். - 191

வாழ்க! நான் இவளோடு இன்புற்று வாழும் இணை யற்ற வாழ்வு மாருமல் இருக்கட்டும்.’

இப்போது அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இந்தக் கருத்தை நற்றினையில் வரும் அழகிய பாட்டு ஒன்று வெளியிடுகிறது. காதலன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது, அந்தப் பாட்டு.

புணரிற் புணராது பொருளே; பொருள்வயின் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் செல்லினும் செல்ல யாயினும், நல்லதற்கு உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே, வாட்ாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியிற் கெடுவ, யானே, விழுநீர் வியலகம்.துணி ஆக

எழுமாண் அளக்கும் விழுதெதி பெறினும், கனங்குழைக்கு அமர்த்த சேய்அரி மழைக்கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன் எனய ஆகுக, வாழிய பொருளே!

(கான் இவளோடு சேர்ந்திருந்தால் பொருள் எனக்குக் கிடைக்காது; பொருளேத் தேடி இவளைப் பிரிந்தால் இவளுடன் இணையும் இன்பம் கிடைக்காது. இந்த இரண் டுக்குமிடையே, பிரிந்து போனலும், போகாவிட்டாலும், கல்லதாகிய ஒன்றைப் பெறுவதற்கு உரியாய் ;ே என் கெஞ்சமே, வாழி! பொருள், வாடாத பூவையுடைய பொய் கையின் நடுவிலே ஒடுகிற மீனின் வழி உடனே கெடுவது போல, விரைவில் அழிந்துவிடும். கான், உயர்ந்த கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகமே அளவு கருவியாக ஏழு தடவை அளக்கும் உயர்ந்த நிதியைப் பெற்றாலும், கனமான பொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/199&oldid=612980" இலிருந்து மீள்விக்கப்பட்டது