பக்கம்:கன்னித் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கன்னித் தமிழ்


பொருத்தம். கமுகு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ரகரம் பெற்று க்ரமுகம் என்று வழங்கு கிறது. மீனை மீனம் என்றும், தாமரையைத் தாமரஸ் மென்றும் வழங்குவதுபோல அம் என்ற விகுதியைப் பின்னே சேர்த்துக் கொண்டார்கள். முன்னும் பின்னும் கூட்டிய இந்த அலங்காரங்களோடு தமிழ், த்ரமிளம் ஆனது வியப்பல்ல.

தொல்காப்பியப்பாயிரத்தில் அதன் ஆசிரியர் தமிழ் நாட்டை, “தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று சொல்கிறார். அப்படிப் பாடியவர் தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பாரளுர் என்பவர். மேலும், செந்தமிழ் இயற்கை

சிவணிய நிலம்” என்றும் சொல்கிறார்,

தொல்காப்பியத்தில் ஒரு சொல்லும் மற்றாெரு சொல்லும் சேர்ந்தால் என்ன என்ன மாறுபாடுகள் உண்டாகும் என்ற செய்தி எழுத்ததிகாரத்தில் வருகிறது. தமிழ் என்னும் சொல்லோடு வேறு சொற்கள் வந்து சேர்ந்தால் எவ்வாறு நிற்கும் என்ப தைப்பற்றி ஒரு சூத்திரம் சொல்கிறது.

“தமிழ் என் கிளவியும் அதனே ரற்றே” என்பது அந்தச் சூத்திரம். தமிழ் என்ற சொல்லுக்குப் பிறகு கூத்து என்ற சொல் வந்தால் தமிழக் கூத்து என்று ஆகும். இதற்குரிய விதி இந்தச் சூத்திரம். தமிழர்கள் பேச்சிலும் நூலிலும் வழங்கும் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழ் என்ற சொல் மற்ற வார்த்தையோடு சேர்ந்து வழங்கும்போது இப்படி ஆகும் என்று சொல்வதனால், அப்படி ஒரு சொல் அவர் காலத்திலே வழங்கியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். . . s’ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/20&oldid=1285973" இலிருந்து மீள்விக்கப்பட்டது