பக்கம்:கன்னித் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் வைத்தவர் யார்? 13.

- தொல்காப்பியத்தில் சொல்லைப் பற்றி ஆராயும்

பகுதிக்குச் சொல்லதிகாரம் என்று பெயர். இயற்கை’ யாக யாவருக்கும் விளங்கும்படி உள்ள சொற்களை இயற்சொல் என்று அங்கே பிரிக்கிறார். “இயல்பாகவே விளங்கும் சொல்’ என்று சொன்னல், யாருக்கு விளங்குவது?’ என்ற கேள்வி வரும் அல்லவா? தமிழ் நாட்டில் தமிழ் வழங்கிலுைம் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி தமிழ் வழங்குவதில்லை. சென்னைப் பக்கத்துத் தமிழுக்கும் திருநெல்வேலித் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மதுரைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. சில சொற்கள் யாழ்ப்பாணத்தாருக்கு எளிதில் விளங்கும்; மற்ற நாட்டாருக்கு விளங்கா. தெண்டித்தல்’ என்ற சொல்லை யாழ்ப்பாணத்துப் பேச்சில் சர்வ சாதாரண மாக வழங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதற்குத் தண்டனை தருதல் என்ற அர்த்தத்தையே கொள்வார்கள். முயலுதல்’ என்ற பொருளில் அதை யாழ்ப்பாணத்தார் வழங்குகிறார்கள். ஆகையால், எளிய சொல் என்பது இடத்தைப் பொறுததது. என்று தெரியவரும். .

இதைத் தொல்காப்பியர் உணர்ந்தவர். இயல்பாக விளங்கும் சொல்லாகிய இயற்சொல் இன்னதென்று. சொல்ல வருபவர், இன்ன பகுதியில் இயல்பாக வழங்கும் சொல் என்று குறிப்பிடுகிறார். இயற். சொற்கள் என்பன, செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்துக்குப் பொருந்தித் தம் பொருளிலிருந்து மாருமல் நடப்பவை’ என்று சொல்லுகிறார், அங்கே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய செந்தமிழ் நிலத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/21&oldid=613016" இலிருந்து மீள்விக்கப்பட்டது