பக்கம்:கன்னித் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கன்னித் தமிழ்


குறிக்கிறார். மதுரையை நடுவாகக் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதியைச் செந்தமிழ் நாடென்று முன்பு வழங்கி வந்தனர். “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி’ என்று வருகிறது சூத்திரம். அங்கே தமிழ் என்ற வார்த்தையை ஆண்டிருக்கிறார்.

தொல்காப்பியருக்குப் பின் எழுந்த நூல்களில் தமிழ் என்ற பெயர் வந்ததற்குக் கணக்கே இல்லை.

இப்படி நூல்களில் தமிழ் என்ற சொல்லாட்சி பல விடங்களில் வரும்போது, “தமிழுக்குப் பெயர் வைத்த வர் தமிழரே என்று சொல்வதுதானே நியாயம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/22&oldid=1285974" இலிருந்து மீள்விக்கப்பட்டது