பக்கம்:கன்னித் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தொடங்கிய சங்கம்

“பெருமானே, நான் தென் டுை போக வேண்டு மாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண் டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!” என்று அகத்திய முனிவர் சிவபெருமா னிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ் சிறப்போடு விளங்கியது. உலக முழு வதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றி யது. தென்னுட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு மக்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னுட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடிய வில்லை. தென்னுட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை. சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/23&oldid=613090" இலிருந்து மீள்விக்கப்பட்டது