பக்கம்:கன்னித் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கன்னித் தமிழ்


தென்னுட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவு மால்ை, அங்கே வாழும் குடிமக்கள் என்னுவது? பெரிய வர்களே அஞ்சி ஒடி வந்துவிட்டால், தென்னுடு முழு வதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வ நினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது?

இவற்றையெல்லாம் சிவபெருமான் திருவுள்ளத் தில் நினைந்து பார்த்தார். யாரேனும் வலியவர் ஒரு வரையோ, சிலரையோ தமிழ் நாட்டில் நிறுவினுலன்றி, இத்தீமை போகாது என்று எண்ணினர். திருமண நிகழ்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாடு வாழ வேண்டு மென்ற நினைவு பெருமானுக்குப் பெரிதாயிற்று. தவத் திறமையும் அறிவுப் பெருமையும் உடையவராக ஒரு வரைத் தலைவராகக்கொண்ட ஒரு கூட்டத்தைத் தென் ட்ைடுக்கு அனுப்பத் தீர்மானித்தார் சிவபெருமான்.

அகத்தியரே அவரது திருவுள்ளத்துக்கு உவப் பானவராகத் தோற்றினர். உடனே அ வ ைர அழைத்து, “நீ தென்னுட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி நல்லோரைப் பாதுகாத்து அற நெறியைப் பரப்ப வேண்டும்’ என்று கட்டளையிட்டார். -

அப்பொழுதுதான் அகத்தியர், ஒரு நாட்டுக்குச் சென்று வாழவேண்டுமானல் அந்நாட்டு மொழியில் தக்க திறமை வேண்டுமே என்ற கருத்தை வெளியிட் டார். உண்மைதானே? உடனே சிவபெருமான் அகத் திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தை உபதேசித் தருளினர். கூரிய மதிபடைத்த முனிவர் தமிழ் நெறியை உணர்ந்து கொண்டார். திருவருளும் த மும் துணையாகத் தென்னுட்டுக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/24&oldid=1285975" இலிருந்து மீள்விக்கப்பட்டது