பக்கம்:கன்னித் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தொடங்கிய சங்கம் 17

வரும் வழியில் அவருக்கு எத்தனையோ இடையூறு கள் நேர்ந்தன. எல்லாவற்றையும் வென்று நேரே தென்னுட்டுக்கு வந்து சேர்ந்தார். .

அந்த நாடு காடு அடர்ந்து, மலைவளம் கெழுமி, இயற்கை யெழில் பொங்கும் நாடாக இருந்தது. முன்பு அங்கங்கே முனிவர்கள் தங்கியிருந்தார்கள். இப் போது எல்லாம் சூன்யமாக இருந்தன. நேரே தென் றமிழ் நாட்டில் ஒரு மலைச்சாரலே வந்து அடைந்தார்.

r அக் காலத்தில் அந்தப் பகுதிகளை இராவணன் ஆண்டு வந்தான். அவனுடைய உறவினர்களும் ஏவலர்களும் ஆகிய பல அரக்கர்கள் அங்கங்கே இருந்து சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தனர். யாவ ருக்கும் தலைவனுகிய இராவணனை அவ்விடத்தி லிருந்து முதலில் போகச் செய்தால் அப்பால் ஏனைய வர்களைப் போக்குவது அரிதன்று. தவ முனிவராகிய அகத்தியர் சில மானுக்கரோடு வந்தார். அவருக்குப் படைப்பலம் இல்லை. இராவணனே பல வகையிலும் பலசாலி. அவனை எப்படி ஒட்டுவது?

அகத்தியருக்கு ஒரு தந்திரம் தோன்றியது. இராவ ணன் யாழ் வாசிப்பதில் வல்லவன். சிவபெருமானையே யாழிசையால் குழைவித்து வரம் பெற்றவன். அகத்தி யரும் யாழ் வாசிப்பதில் வல்லவர். படைத்திறமை இல் லாத அகத்தியர் இந்த யாழ்த்திறமையில்பொருது இரா வணனை வெல்லலா மென்று எண்ணிஞர். இராவண ணுக்கு ஆள்போக்கி, யாழிசைப் போருக்கு அழைத்தார்.

போருக்கு ஆளின்றித் தினவு கொண் ட தோளோடு, யாழிசையிலே ஒன்றியிருந்த இராவணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/25&oldid=613162" இலிருந்து மீள்விக்கப்பட்டது