பக்கம்:கன்னித் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கன்னித் தமிழ்


அகத்தியருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டான். அகத்தியர் தென்னாட்டில் வந்து குடி புகுந்ததை விரும்பாதவன் அவன். அவரை மீட்டும் வந்த வழியே அனுப்பிவிடவேண்டுமென்னும் உள்ளக் கருத்துடைய வன். அதற்கு இந்த யாழிசைப்போர் துணை செய்யும் என்ற எண்ணத்தால், அவன் இதனை ஆவலுடன் ஏற்றுக்கொண்டான். தனக்கு மிஞ்சி யாழ் வாசிப்பவர் இல்லையென்பது அவன் உறுதியான நினைப்பு.

அகத்தியரும்,இராவணனும் யாழிசைப் போர் செய் வதென்று தீர்மானமாயிற்று. இந்த வாதத்தில் நடு நின்று கவனித்து, இன்னரே வென்றார் என்று சொல்ல ஒருவர் வேண்டுமே! இராவணனது கொடு மைக்கு அஞ்சி யாரும் வரவில்லை. அகத்தியர் ஒரு யோசனை சொன்னர்; “சிறந்த சங்கீதத்தின் அலை மோதினுல் கல் உருகும் என்று சாத்திரம் சொல் கிறது. நாம் இருவரும் யாழ் வாசிப்போம். இந்த மலையே நமக்கு நடுநின்று கவனிக்கும் மத்தியஸ்தராக இருக்கட்டும். யாருடைய பாட்டுக்கு மலை உருகு கிறதோ அவரே வெற்றிக்கு உரியவர்’ என்றார். இராவணன் உடன்பட்டான். தோல்வியுறுபவர் அந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிபந் தனையை இருவரும் ஒப்புக்கொண்டனர். இராவணன் நிச்சயமாக அகத்தியரை வடக்கே அனுப்பி விடலா மென்று நம்பினுன்.

யாழிசைப் போர் ஆரம்பமாயிற்று. முதலில் அகத்தியர் தம் யாழால் இசை பரப்பத் தொடங்கினர்.

திருவருட் பலமும் தவத்திறமையும் அவர் கரங்களுக்கு ஆற்றலைக் கொடுத்தன. விலங்கினங்களும் மெய்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/26&oldid=1285976" இலிருந்து மீள்விக்கப்பட்டது