பக்கம்:கன்னித் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தொடங்கிய சங்கம் 19

மறந்து கேட்கும்படி யாழை இயக்கினர். இராவணனே தன்னை மறந்து நின்றான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா?

அகத்தியர் மேலும் மேலும் வாசித்துக் கொண்டு போனர். மரங்கள் அசைதலை ஒழிந்தன. காற்றுக் கூட வீசாமல் நின்றது. வேறு ஒலி ஏதும் இல்லை. அந்த அகண்ட மெளனப் பரப்பிலே குறுமுனிவராகிய அகத்தியர் தம்முடைய யாழை மீட்டிக் கொண்டிருந் தார். அதிலிருந்து பிறந்த இன்னிசை அலை அலை யாகப் பரந்து சென்று பிரபஞ்ச முழுவதுமே கான மயமாக்கி விட்டது. நிற்பனவும் அசைவனவுமாகிய பொருள்கள் யாவும் தம்முடைய இயற்கையை மறந்தன.

இத்தகைய பரவச நிலையில் அருகில் நின்ற மலை யும் நெகிழ்ச்சி பெற்றது; உருகத் தொடங்கியது. இனி மேலே வாசித்தால் உலகு கொள்ளாது என்று கருதி முனிவர் தம் இசையை நிறுத்தினர்.

மெய்ம்மறந்து நின்ற இராவணன் தன் நினைவு பெற்றான். சிவபெருமானது கருணைத் திருவுள்ளத் தைத் தன் யாழிசையால் உருக்கிய அந்த அரக்கனுக்கே பிரமிப்புத் தட்டியது. மலையாவது உருகுவதாவது!” என்று எண்ணிய எண்ணம் நெகிழ்ச்சியுற்றது. அகத்தி யர் இசை அவன் உள்ளத்தையே கரையச் செய்தது. அவர் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்று தோன்றியது. ஆனல் மானம் என்ற ஒன்று இருக் கிறதே, அது தடுத்தது.

முதலில் பேசியபடியே இப்போது இராவணன் தன் திறமையைக்காட்ட ஆரம்பித்தான். கைலாசத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/27&oldid=613192" இலிருந்து மீள்விக்கப்பட்டது