பக்கம்:கன்னித் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கன்னித் தமிழ்


கீழே நசுங்கின போது அவன் உண்மையிலேயே மனங்குழைந்து பாடி யாழ் வாசித்தான். இப்போது அந்தக் குழைவு இல்லை. கர்வமும் கலக்கமுமே அவன் உள்ளத்தில் மீதுார்ந்து நின்றன. கலை தோன்ற நெகிழ்ச்சியான உள்ளமல்லவா வேண்டும் ? அது அவனிடத்தில் அப்போது இல்லை. அவனுடைய விரல்கள் விளையாடின; வீணை நரம்புகள் பேசின; பாட்டு எழும்பியது; காதுக்கு இனிதாக இருந்தது; கருத்திலும் இனிமையைப் புகுத்தியது. ஆல்ை, கருத்தை ஓடாமல் தடைப்படுத்தி உடம்பை மறக்கச் செய்யவில்லை. அவன் தன்னை மறந்து, ஆணவம் கழன்று, இசை மயமாக நின்று வாசித்திருந்தால் ஒரு கால் அந்த இசை வென்றிருக்கலாம். நாம் தோல்வி யுறக் கூடாதே என்ற நினைவுதான் அவன் உள்ளத் தில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அவன் வேறு, இசை வேருக நின்றான். ஆதலின் இசையில் இனிமை இருந்தது; சமற்காரம் இருந்தது. ஆணுல் மயக்கும் மாயம் இல்லை; அசைவின்றிச் செய்யும் அற்புதம்

இருபது கைகளாலும் மாறி மாறி வாசித்தான். அவன் பேரரக்கன். அவனுக்கு ஏற்ற இராட்சச வீணை அது. அதனுடைய நரம்புக் கட்டுகள் அவன் இருபது கைகளாலும் வாசிப்பதற்காகவே அமைக்கப்பட்டன. இவ்வளவு இருந்தும் யாழிசை புறத்தில்தான் தவழ்ந் தது; அகத்தே சென்று உருக்கவில்லை.

எவ்வளவு நாழிகை அதைேடு மன்றாட முடியும்? ஒரு கலைஞனுக்குத் தோற்று நிற்பது அவமானமாகாது

என்று இராவணன் சமாதானம் செய்து கொண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/28&oldid=1285977" இலிருந்து மீள்விக்கப்பட்டது