பக்கம்:கன்னித் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தொடங்கிய சங்கம் 31

தான் தோற்றதாகவே ஒப்புக்கொண்டான். செய்து கொண்டநிபந்தனைப்படியே தென்னுட்டு ஆட்சியைக் கைவிட்டு இலங்கைக்குச் சென்று வாழலானன்.

அகத்திய முனிவர் வெற்றி பெற்றார். அவர் செய்யவேண்டிய காரியம் ஒரு பகுதி ஆயிற்று; தென் ட்ைடைத் தமதாக ஆக்கிக்கொண்டார். இனி, அதை வளம்படுத்தி அறிஞர் கூட்டங்களை அங்கங்கே அமைக்க வேண்டும். வடக்கே சென்றவர்களே மீண் டும் தமிழ் நாட்டுக்கு வரும்படி செய்யவேண்டும்.

ஓரிடத்தில் நிலையாக இருந்து கொண்டு இந்த ஆக்க வேலைகளைச் செய்ய நினைத்தார். தமக்கு இசைப் போரில் வெற்றியைக் கொடுத்த அந்த மலையையே தம்முடைய இருப்பிடமாகக் கொள்ள எண்ணினர். அவ்வாறே அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டார். தமிழ் நாட்டு மக்களை அழைத்துக் கூட்டி அவர் களோடு பழக வேண்டுமென்று விரும்பினர். அங் கங்கே சில அரசர்கள் இருந்தனர். அவருள் பாண்டி யன் பெரியவகை இருந்தான். அவனையும் பிறரையும் வருவிக்க ஆசிரமத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா? தமிழ்மொழி யாராய்ச்சி செய்வதைக் கருத்தாகக் கொண்டு அந்த மலையில் யாவரையும் கூட்ட முயன்றார். அவர் முயற்சி பயன் பெற்றது. அடிக்கடி பாண்டிய மன்னனும் பிறரும் வந்து வந்து முனிவரோடு பேசிச் சென்றனர். தமிழ் மொழியைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற் றது. முனிவரும் தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக் குச் சென்று மக்கள் வழங்கும் பேச்சையும், பெரியோர் வழங்கும் மரபையும், வேறு நூல்களையும் உணர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/29&oldid=613200" இலிருந்து மீள்விக்கப்பட்டது