பக்கம்:கன்னித் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

கன்னித் தமிழ்


வேதத்திலும் வட மொழியிலும் வன்மை பெற்றுப் பேரறிவுடையவராக விளங்கிய அகத்தியர் விரைவிலே தமிழில் தமக்கு இணையில்லாத பெரும்புலவராகி விட் டார். சிவபெருமான் உபதேசித்த இலக்கணமும், தமிழ் நாட்டில் பிரயாணம் செய்து தெரிந்து கொண்ட வழக்கும் அவருடைய அறிவை வளப்படுத்தின.

அவர் இருந்த மலையில் அடிக்கடி புலவர்கள் கூடலானர்கள். அனைவரும் கூடும் பொதுவான இடமாக ஆயிற்று அம் மலை. அதனுல் அந்த மலைக்கே பொது இடம் அல்லது சபை என்ற பொருளையுடைய பெயர் ஏற்பட்டது. பொது இல் என்று முதலில் வழங்கி, அப்பால் பொதியில் என்று வழங்கலாயிற்று. பொதிய மலை, பொதியில், பொதியம், பொதிகை என்றெல்லாம் உச்சரிப்பு வேறுபாடுகளால் அந்தப் பெயரே வெவ் வேறு உருவத்தை எடுத்தது. பொதியில் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பலரும் கூடும் சபை என்ற பொருள் இருக்கிறது. புலவர்கள் கூடும் சபைக்கும் பொதியில் என்று பெயர். சபை கூடும் சிறப்பான நிகழ்ச்சி அடிக்கடி நடந்த காரணத்தினுல் அந்த மலைக்குப் பொதியில் என்றே பெயர் வழங்கத் தொடங்கியது.

•. தமிழ்ச் சபை அல்லது சங்கம் அகத்தியருடைய தலைமையில் பொதியில் மலையில் நடந்து வந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. வரவர அந்தச் சங்கத் தின் பெருமை அதிகமாயிற்று. அகத்தியருடன் எப்போதும் இருந்து தமிழ்ப் பாடம் கேட்கும் மாணுக் கர்கள் சிலர் ஏற்பட்டனர். பாண்டிய மன்னனும் அவரிடம் தமிழிலக்கணம் கற்றுக்கொண்டான்.

அகத்தியர் நிறுவிய சங்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/30&oldid=1285978" இலிருந்து மீள்விக்கப்பட்டது