பக்கம்:கன்னித் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச் சங்கம்

அகத்திய முனிவர் பொதியில் மலையிலே வளர்த்து வந்த சங்கம் தமிழ் நாட்டுக்குச் சிறப்பை உண்டாக் கியது. தமிழ்ச் சான்றாேர் அச் சங்கத்தில் கலந்து கொண்டனர். இயல், இசை, நாடகம் என்று மூன்று வகையாகப் பிரித்துத் தமிழைஆராய்ச்சி செய்தார்கள். இலக்கண இலக்கியங்களை இயலென்று பிரித்தார்கள். பண்ணையும் பாட்டையும் இசையென்று வகுத்தனர்; அபிநயம், ஆடல் என்பவற்றை நாடகமாக அமைத் தனர். இந்த மூன்று திறத்திலும் ஆராய்ச்சி விரி வடைந்தது. -

தமிழ் நாட்டில் இயல் தமிழாகிய இலக்கண இலக் கியங்களில் வல்ல புலவர்கள் அங்கங்கே இருந்தனர். இசைத்தமிழாகிய பண்ணிலும் பாட்டிலும் இசைக் கருவிகளிலும் வல்ல பாணரும் பொருநரும் விறலி யரும் வாழ்ந்து வந்தனர். கூத்தில் வல்ல கூத்தரும் அங்கங்கே சிதறுண்டு கிடந்தனர். அவர்களுடைய கலைத் திறத்தைப் பாதுகாக்கும் முயற்சியை அகத்திய ரைத் தலைவராகக் கொண்ட சங்கத்தினர் செய்யலா யினர்.

நாட்டில் அமைதி இரு ந்தால்தான் ಹಸಿಖರ್ಹ ஓங்கும். அமைதியின்றி ஆட்சி வழுவி அறம் மாறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/31&oldid=613209" இலிருந்து மீள்விக்கப்பட்டது