பக்கம்:கன்னித் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கன்னித் தமிழ்


கொடுங்கோன்மை மலிந்தால் அந்த நாட்டிலே பேரறிவாளர் இருந்தாலும் அவர்களுடைய முயற் சிக்குப் பாதுகாப்பு இராது, நாளடைவில் அவர்கள் மங்கி மறைவார்கள். -

தமிழ் நாட்டில் தமிழ் வழங்கத் தொடங்கிய காலம் இன்னதென்று வரையறுப்பது மிகவும் கடினமான செயல். தமிழுக்கு ஜாதகம் எழுதும் சோதிடர் யாரும்

இல்லை. பிறந்த நாள் தெரியாமல், வளர்ந்த சோடும்

தெரியாமல், இன்னும் தெய்வத் திருவருள் விலாசத் தோடு விளங்குவதனுல் பராசக்தியைக் கன்னி என்று

ஒதுவர் பெரியோர். தமிழும் அத்தகைய இயல்

புடையதே. ஆதலின் இதனைக் கன்னித் தமிழ் என்று

சான்றாேர் வழங்கினர்.

தமிழரிடையே தமிழ் நெடுங்காலமாக வழங்கியது. அவர்கள் வாழ்வு சிறக்கச் சிறக்க அவர்கள் பேசும் மொழியும் சிறப்பு அடைந்தது. ஒரு மொழிக்குச் சிறப்பு, அதில் உள்ள நூல்களால் அமையும். தமிழில் பல நூல்கள் உண்டாயின. ஆல்ை தமிழர் வாழ்வில் அமைதியில்லாமற்போகவே, தமிழ் நூல்கள் ஆதரிப்பா ஏற்று மங்கலாயின. புலவருடைய புலமையைப் போற்று வார் இல்லை. -

இத்தகைய காலத்தில் அகத்தியர் தென்னுட்டுக்கு வந்து அறநெறியை நிமிர்த்தினர். மீட்டும் தமிழ்நாடு வளம்பெறலாயிற்று. தமிழரசர் வலி பெற்றனர். தமிழ் தழைக்கத் தொடங்கியது. மூலை முடுக்கில் அடங்கி ஒடுங்கியிருந்த புலம்ை வெளியாகியது. அகத்திய முனிவர் நிறுவிய தமிழ்ச் சங்கம் பல புல வர்கள் சேரும் பெருங் கூட்டமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/32&oldid=1285979" இலிருந்து மீள்விக்கப்பட்டது