பக்கம்:கன்னித் தமிழ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னே யின் கதை

ஆழமும் அகலமும் காணமுடியாத கடலின் கரை யிலே புன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின் றன. ஆழம் காணமுடியாத காதலையுடைய அவ் விருவரும் அந்தப் புன்னைப் பூம்பொழிலில் சந் தித்து அளவளாவி இன்புற்றனர். இன்னும் அவர் களுக்கு மணம் ஆகவில்லை. களவிலே சந்தித்துக் காதலை வளர்த்தனர். காதலியின் தோழி ஒருத்தி அவர்களுடைய காதற்கொடி படர்வதற்குக் கொம்பு நட்டுப் பந்தரிட்டுப் பாதுகாத்தாள்.

காதலன் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்து தன் காதலியைச் சந்திப்பான். அவன் வேறு இடத்திலிருந்து வருகிறவன். அவனும் கடற்கரையில் உள்ள ஓர் ஊருக்குத் தலைவன்; செல் வமும் அழகும் வலிமையும் பெற்றவன். காதலியின் ஊரும் கடற்கரையைச் சார்ந்தே இருந்தது. அதன் அருகில் உள்ள புன்னைப் பொழிலில்தான் அவ்விரு வரும் கண்டு அளவளாவினர். - .

அவர்களுடைய உறவு தொடங்கிச் சிறிது

காலமே ஆயிற்று. ஆயினும் பல ஆண்டுகள் பழ

கினவர்களைப் போல ஆகிவிட்டனர். அவர்களுடைய

உயிர்கள் ஒன்றனை ஒன்று பல பிறவிகளாக அறிந்து

கொண்டவை போலும் இவ்வுலகத்தில் இப்பிறவி

13 . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/201&oldid=612989" இலிருந்து மீள்விக்கப்பட்டது