பக்கம்:கன்னித் தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னேயின் கதை 195

காதலனுகிய அந்த ஆடவன் எல்லா வகையி லும் உயர்ந்தவன். அவனிடம் தோழி, “நீ எங்கள் தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று. அவனே, “நாம் இனி இவளை மணப்பது தான் சரி என்று உணர்ந்து அதற்குரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். அவனே களவிலே பெற்ற இன்பப் போதையில்ை தலைவிக்குத் தன்னைப் பிரியும் காலத்தில் துன்பம் உண்டாகும் என்பதையே நினையாமல் இருக்கிருன். அவன் தன் காதலியைப் பிரிந்திருக்கும் போதிலெல்லாம் பல வேலைகளில் ஈடு படும் வாய்ப்புள்ளவ குதலின் அவனுக்கு அத்தகைய துன்பம் மிகுதியாக இல்லை. -

அவனுக்குத் தன் காதலியை மணம் செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்படி செய்யவேண்டும். அதற்கு வழி என்ன என்பதைத் தோழி உன்னிள்ை. இப்போது அவனும் அவளும் பிறர் அறியாமல் ஒன்று படுகிறார்களே, இது எளிதில் நிகழ்வதன்று; இதற் குப் பல இடையூறுகள் உண்டு என்பதை அவன் உணர்ந்தாைைல், அந்த இடையூறுகள் இல் லாமல் அவளைச் சந்திக்க வேண்டுமென்ற எண் ணம் தோன்றி, அதற்குத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே ஏற்றதென்று தெரிந்து கொள்வான். ஆதலின் களவுப் புணர்ச்சியில் இடையூறுகள் உண்டு என்பதை அவன் தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். -

வழி தெரிந்தவுடன் முயற்சி பலம் அடைகிறது. தோழி தலைவனுக்குக் குறிப்பாக, களவுப் புணர்ச்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/203&oldid=612995" இலிருந்து மீள்விக்கப்பட்டது