பக்கம்:கன்னித் தமிழ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

கன்னித் தமிழ்


உள்ள இடையூறுகளை உணர்த்த முற்படுகிருள். நாள் தோறும் சந்திக்கும் இடத்தை மாற்றுகிருள். காலத் தையும் இடத்தையும் அமைத்துக் கொடுத்து அவர் கள் உறவுக்கு உரமிடுகிறவள் அவள்தானே? இவ் வாறு மாற்றி அமைப்பதைக் குறி பெயர்த்திடுதல் என்று தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள்.

இடத்தை மாற்றும் எண்ணமுடைய தோழி அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுகொண்டாள்.

காதலனும் காதலியும் ஒரு குறிப்பிட்ட புன்னை மரத்தின் நிழலில் சந்தித்தார்கள். ஒரு நாள் காதலன் வந்து அளவளாவி விட்டு விடைபெற்றுச் செல்லத் தொடங்கினன். அப்போது தோழி அவனைக் கண்டு, தன் கருத்தை நிறைவேற்ற முயன்றாள்.

“நாளை முதல் இந்தப் புன்னை மரத்தடிக்கு வர வேண்டாம்’ என்றாள் அவள்.

“ஏன்?” என்று கேட்டான் தலைவன். “இப்போதுதான் இந்தப் புன்னை மரத்தைப் பற்றி எங்கள் அன்னை சொன்ன செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நினைந்தால் இதன் அடியில் நீங்கள் சந்திப்பது தகாது என்று தோன்றுகிறது.” . -

என்ன செய்தி அது ?” “ஒரு நாள் எங்கள் தாயும் நானும் நின் காதலியும் இந்தப் பக்கமாக வந்தோம். அப்போது இந்த மரத்தைக் கண்டவுடன் எங்கள் தாய் சற்று நின்றாள். அவள் முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்பட்டது. ஏனம்மா நிற்கிறாய்?’ என்று கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/204&oldid=1286054" இலிருந்து மீள்விக்கப்பட்டது