பக்கம்:கன்னித் தமிழ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னேயின் கதை 197

டோம். அப்போது இந்தப் புன்னை மரத்தின் கதை யைச் சொன்னுள். இப்படிக் கூறித் தலைவியின் தாய் சொன்னதைத் தோழி எடுத்துச் சொன்னுள்.

责 தாய் இளம் பெண்ணுக இருந்த காலம் அது. வேறு இளம் பெண்களோடு அந்தக் கடற்கரையில் விளையாடுவது அவள் வழக்கம். புன்னைக் காய்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு விளையாடுவார் கள். ஒரு நாள் அப்படி விளையாடியபோது ஒரு புன் னைக் காயை மணலுக்குள்ளே புதைத்து விளையாடினர் கள். பிறகு விளையாட்டுப்போக்கில் அதை மறந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். .

இரண்டு மூன்று நாள் கழிந்த பிறகு ஒருநாள் அந்த இடத்தில் புன்னைக் கொட்டை முளை விட்டிருப் பதை அவள் தலைவியின் தாய் கண்டாள். அடே! நாம் அன்று புதைத்து மறந்துவிட்டுப் போய்விட் டோம். அது முளைத்திருக்கிறதே! என்று ஆச்சரியப் பட்டாள். அவளுக்கும் அவளுடைய தோழிகளுக்கும் அதனிடம் தனியே ஓர் அபிமானம் தோன்றிவிட்டது; தம் கையால் நட்ட வித்திலிருந்து தோன்றிய முளை என்ற அபிமானம். அது முளைக்கவேண்டும் என்று எண்ணி அவர்கள் புதைக்கவில்லை. ஆலுைம் அது முளைத்துவிட்டது. எதிர்பாராமல் தோன்றியமையால் அவர்களுக்கு வியப்பு; தாங்கள் புதைத்தது என்ப தல்ை ஆனந்தம். -

இனி அதை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற பற்று உண்டாகிவிட்டது. இளங் குழந்தைகளின் நெஞ்சிலேதான் எத்தனை ஆசை அதற்கு நீர் வார்த்து வளர்ப்பதா சின்னஞ் சிறு குழந்தையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/205&oldid=613001" இலிருந்து மீள்விக்கப்பட்டது