பக்கம்:கன்னித் தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

கன்னித் தமிழ்

போலப் பாலூட்டி யல்லவா வளர்க்க வேண்டும்? அவர்கள் தம் வீட்டில் நெய்யும் பாலும் உண்டு வளர் கிறவர்கள். அவர்களுடைய குழந்தையாகிய அந்தப் புன்னையும் நெய்யும் பாலும் உண்டு வளரவேண்டும். தினந்தோறும் பாலும் நெய்யும் கொண்டு வந்து விட்டு வளர்த்தார்கள். பாலிலும் தண்ணிர் இருக் கிறது. வானிலிருந்து பெய்யும் மழைநீர் இருக்கிறது. இவற்றால் அந்தப் புன்னை முளை இலைவிட்டுச் செடி யாயிற்று.

“அந்தச் செடி வளர்ந்து மரமாகி விட்டது. அது தான் இது. நெய்யும் பாலும் ஊட்டி உங்களை வளர்ப் பதற்கு முன்னே இந்தப் புன்னைக்கு நெய்யும் பாலும் ஊட்டி இதனை வளர்த்தேன். இதுதான் என் முதற் குழந்தை. அந்த முறைப்படி பார்த்தால் இந்தப் புன்னை உங்களுக்கு அக்காளாக வேண்டும்’ என்று தாய் சொன்னுள். இதைத் தோழி இப்போது தலைவ னிடம் கூறினுள்.

‘உங்களைக் காட்டிலும் சிறந்தது இது; உங்க ளுக்குத் தமக்கையாகும் என்று அன்னை சொன்னுள். இந்தப் புன்னை யக்காளுக்குப் பக்கத்தில் களவிலே சந்திப்பதற்கு எங்களுக்கு வெட்கமாயிராதா? இந்தக் கடற்கரையில் மரத்துக்குப் பஞ்சம் இல்லை. இன்னும் பல மரங்கள் இருக்கின்றன” என்று கூறினுள்.

மரத்தைக் குழந்தை போலப் பாதுகாக்கும் உயர்ந்த பண்பை அவனும் அறிவான். தம்முடைய தமக்கையாகப் பாவித்து ஒழுகும் பெண்களின் நுட்ப மான உணர்ச்சியும் அவனுக்கு விளங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/206&oldid=1286055" இலிருந்து மீள்விக்கப்பட்டது