பக்கம்:கன்னித் தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

கன்னித் தமிழ்


முயற்சியினலே பெறப்படுவது. முயற்சியில்லாதவர் பொருளை இழப்பரே அன்றி ஈட்டுதல் முடியாது. தன் காதலன் ஆள்வினையிற் சிறந்து பொருள் ஈட்டி வருவது காதலிக்குப் பெருமிதத்தை உண்டாக்கியது. அப்படி முயற்சியின்மேற் செல்லும் காலத்தில் அவனைப் பிரிந்து வாழவேண்டியிருப்பினும், அந்தப் பிரிவுத் துன்பத்தை ஒருவாறு ஆற்றியிருந்தாள். பிரிவின் முடிவில் பெரிய இன்பம் இருப்பதை நினைந்து அவள் ஆறுதல் பெற்றாள்.

கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய கணவனுகிய அவன் இல்வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஊரவர் புகழ ஊதியம்பெற்று வரும்போது அவளுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? மணம் செய்துகொள் வதற்கு முன்பு இன்பம் ஒன்றையே லட்சியமாகக் கருதி அவர்கள் பழகி வந்தார்கள். உலகியலையும் பிற கட்டுப்பாடுகளையும் மறந்து சுதந்தரமாக இன்பம் துய்த்தனர். மணம் செய்து கொண்ட பின்போ, இன்பம் துய்க்கும் பகுதி இருப்பினும், அறம் செய்வதே தலைமை நோக்கமாயிற்று. அதற்குப் பொருளிட்டுவது இன்றியமையாததாகிவிட்டது. பொருள் நிரம்பினுல் அறம் செய்து இன்பம் துய்த்து வீட்டு நெறியிலே படரும் முயற்சிகளையும் செய்யலாம். வாழ்வின் பயன் இந்த நான்கு உறுதிப் பொருளையும் அடைவதுதான் என்பது பாரத நாடு முழுவதும் ஊறிப்போன

கொள்கை.

தலைவன் பொருள் ஈட்டி வந்தால் இல்வாழ்க்கை செவ்விதாக நிறைவேறிவிடுமா? ஈட்டி வந்த பொருளைத் தக்கவண்ணம் பாதுகாத்துச்.டசெலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/210&oldid=1286057" இலிருந்து மீள்விக்கப்பட்டது