பக்கம்:கன்னித் தமிழ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலி கண்ட காட்சி 203” .

செய்யவேண்டும். வரவுக்கு ஏற்ற வகையில் செலவை அமைத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கடமையை மேற்கொள்கிருள் காதலி. மனத் தலைவியாகிய அவளுடைய கையிலே இருக்கிறது இன்ப வாழ்வு. தன்னைக் கொண்டவனது செல்வ வருவாய்க்குத் தக்க வகையில் இல்வாழ்க்கையை நடத்தும் ஆற்றலை அவள் பெற்றிருக்கிருள். ஏர் பிடித்த ஆடவன் எத்தனை ஈட்டிலுைம் பானை பிடித்தவள் பங்கிட்டுச் செலவு செய்தால் ஒழிய, இல்லறத்தில் இன்பம் காண வகையில்லை. இதை நன்குணர்ந்த காதலி தலைவன் பெற்று வந்த பொருளை அருமை அறிந்து பேணு கிருள்; செவ்வியறிந்து செலவு செய்கிருள்.

இன்பம் நிரம்பியது; பொருளும் பொலிந்தது; அறமும் அமைந்தது. அந்தத் தமிழ் மனையின் குறை வேறு என்ன? குறை ஒன்றுமே இல்லையே!இல்லை யென்று சொல்வதற்கு இல்லை. வாழ்வின் மங்கலமான மனையாட்டியைப் பெற்றான் அந்தத் தமிழ் மகன். ஆனல் அதற்கு நன்கலமாக ஒரு புதல்

வனைப் பெறவில்லை. அந்தக் குறை குறைதானே?

இறைவன் அருளால் அந்தக் குறையும் நிரம்பி விட்டது. அழகுப் புதல்வன் மனைக்கு ஆபரணமாகப் பிறந்துவிட்டான். இனி அவர்கள் வாழ்வு இன்ப வாழ்வுதான். இந்த இன்ப வாழ்வுக் காட்சியைப் பலவிதமாகப் பழம் புலவர்கள் பாராட்டி யிருக்கிறார்கள். பேயனுர் என்ற புலவர் ஐங்குறுநூறு என்ற சங்கநூலில் தமிழ் மகன் நடத்திய இன்ப வாழ்வைப் பல பாடல் களிலே சித்திரித்திருக்கிறார். அதில் ஒன்றைச் சிறிது.

பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/211&oldid=613022" இலிருந்து மீள்விக்கப்பட்டது