பக்கம்:கன்னித் தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

கன்னித் தமிழ்


தலைவியைப் பார்ப்பதற்காக அவள் பிறந்தகத் திலிருந்து ஒருத்தி வந்திருக்கிருள். ஒருவருக்கும் தெரியாமல் கள்ளக் காதல் செய்து இந்தக் காளை யோடு பழகினுள். திருமணம் செய்துகொண்டு இப்போது குடித்தனம் செய்கிறார்களே, பழைய அன்பு அப்படியே இருக்கிறதா?’ என்று பார்த்துப் போவதற்காக வந்திருக்கிருள். அவள் வேறு யாரும் அல்ல; இப்போது மனைத் தலைவியாக விளங்கும் பெண்ணைக் குழந்தைப் பருவம் முதல் கண்மணியைப் போலப் பாதுகாத்து வந்த செவிலித் தாய்தான். பெற்ற தாயை நற்றாயென்றும், வளர்த்த தாயைச் செவிலித் தாயென்றும் சொல்வது தமிழர் வழக்கம்.

செவிலி வந்து பார்க்கிருள். வீட்டின் அழகைப் பார்த்து மகிழ்ந்து போகிருள். மிகவும் வசதியான வீடு. அழகான முற்றம் இருக்கிறது. மற்ற இடங் களும் இருக்கின்றன. வீட்டுக்குத் தலைவன், தன். மகளுடைய காதலன், பகல் நேரத்தில் தன் கடமையை ஆற்றச் செல்கிருன். ஆனல் கதிரவன் மறைவதற்கு முன்னே வந்துவிடுகிருன்.

வீட்டில் பண்டங்களுக்குக் குறைவில்லை; கருவி களுக்குக் குறைவில்லை. எல்லாம் நிரம்பியிருக்கின்றன. குழந்தையை எடுத்துக் கொஞ்சுகிருள். தன் மகளைப் பார்த்து, மகிழ்ச்சியாக இருக்கிருயா?” என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை. முயற்சியுள்ள கணவனும் கடமை அறிந்த மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதற்கு ஏற்றபடி இருந்நது அவர்கள்

வாழ்க்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/212&oldid=1286058" இலிருந்து மீள்விக்கப்பட்டது