பக்கம்:கன்னித் தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலி கண்ட காட்சி . 305.

முன்னிரவு நேரம்: காதலனும் காதலியும் உணவு கொண்டனர். பாணன் ஒருவன் வந்தான். அவனுக் கும் உணவு அளித்தனர். குழந்தைக்கும் பாலூட் டினர். வானத்தில் சந்திரன் நிலாவைப் பால்போலச் சொரிந்து கொண்டிருந்தான். பாணனுரை ஒரு. பாட்டுப் பாடச் சொல்லட்டுமா?” என்று கேட்டான் தலைவன். தலைவி, நல்லது’ என்றாள். நிலா எறிக்கும் முற்றத்தில் சித்திர வேலைப்பாடு அமைந்த குறுகிய கால்களையுடைய கட்டிலைப் போட்டார்கள், காதல் தலைவன் அதில் அமர்ந்தான். தனித்து அமர்ந்தால். சுருதி இல்லாத சங்கீதம் போலல்லவா இருக்கும்? அவனுடைய மனைவி துணையாக வந்து அமர்ந்தாள். போதுமா? சுருதி இருந்தும் தாளம் வேண்டாமா? லயம் இல்லாத பாட்டுப் பூரணமான பாட்டு ஆகாதே. அவள் தனியே வரவில்லை. குழந்தையை எடுத்து வந்தாள். தலைவன் வாங்கிக் கொண்டான். கட்டி அணைத்தான். மடியின்மேல் அமர்த்திக்கொண்டான். பாணன் தன்னுடைய யாழை அவிழ்த்து இன் னிசையை எழுப்பின்ை. இன்ப நிலவு, இனிமைத் தென்றல், அன்புக் காதலர், அருமைக் குழந்தை, இசையமுதம் எல்லாம் சேர்ந்து அவ்விடத் ைதத் தேவலோகம் ஆக்கிவிட்டன. .

பாணன் இனிய முல்லைப் பண்ணை வாசிக்கிருன். குழந்தை மார்பிலே பற்றித் தவழத் தலைவன் பாட் டிலே ஆழ்கிருன் தலைவியும் ஆழ்கிருள். இசை வெள்ளமும் நிலா வெள்ளமும் அவர்களைத் தம்மையே மறந்துபோகச் செய்கின்றன. -

இதைக் காட்டிலும் இன்பம் நிறைந்த வாழ்வை வேறு எங்கே காணமுடியும்? உள்ளே இருந்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/213&oldid=613028" இலிருந்து மீள்விக்கப்பட்டது