பக்கம்:கன்னித் தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

கன்னித் தமிழ்


இந்தக் காட்சியை, ஊரிலிருந்து வந்திருக்கும் செவிலித்தாய் பார்க்கிருள். அவள் காது உணர்ச்சி பெறவில்லை; யாழிசையிலே அவள் உள்ளம் முதலில் ஈடுபடவில்லை. கண்தான் கூர்ந்து நோக்கியது. அங்கே இருந்த காட்சி அவள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்தது. அந்த முன்னிரவு நேரமாகிய மாலையைக் கண்டாள்; முற்றத்தைக் கண்டாள். அதன் நடுவிலே குறுங்காற் கட்டிலை அவள் கண்கள் கண்டன. தன் அருமை மகள் அந்தக் கட்டிலில் வீற்றிருத்தலைப் பார்த்தாள். சிங்காதனத்தில் அரசைேடு வீற்றிருக்கும் அரசியைப் போல அந்த மனையரசி அங்கே வீற்றிருந் தாள். அப்போது அவள் முகப் பொலிவைக் கண்டு கண்ணுல் முகந்து பருகினள். அருகில் அவள் காதலனையும் பார்த்தாள். ஊன்றிக் கவனிக்கவில்லை; நாணம் தமிழ்ப் பெண்கள் இயல்பு. ஆனல் அத் தலைவன் மார்பைப் பற்றிக்கொண்டு தவழும் குழந் தையைப் பார்த்தாள். அந்த நேரத்துக்கு ஏற்ற காட்சி அது. அந்த இன்பப் பொழுதுக்கு ஏற்றபடி யாழ் இசையும் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் கண் -ணினல் அளவிட்ட பிறகு, காது கொடுத்துக் கேட் டாள். பாணன் சரியான பாட்டைத்தான் பாடினன். முல்லைப்பண் அமைந்த ஒரு பாட்டு, இன்ப வாழ்வைப் பாடும் பாட்டு. அவள் உள்ளத்தைக்கூட அந்தப் பாட்டு மெல்ல மெல்லப் பிணித்தது. நின்றபடியே கேட்டாள். -

செவிலி மீட்டும் தன் ஊருக்குப் போனுள். நற்றாய், போய் வந்த செய்தியை அறிய-ஆவலோ டிருந்தாள். செவிலி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வில்லை. அவர்கள் வாழ்க்கை பொருளால் நிரம்பியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/214&oldid=1286059" இலிருந்து மீள்விக்கப்பட்டது