பக்கம்:கன்னித் தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலி கண்ட காட்சி 307

கிறதென்று தனியே சொல்லவில்லை. அவர்கள் அன்பு சிறந்து நிற்கிறதென்று பிரித்துப் பேசவில்லை. அவர்கள் கலையின்பத்தில் இன்பம் காண்கிறார்கள் என்று தனியே உரைக்கவில்லை. மாலையிலே தான் கண்ட காட்சியைத் தான் கண்டவாறே சொன்னுள். போதாதா? இன்ப வாழ்வின் அழகிய படந்தானே

அந்தக் காட்சி? - - - - - - - - - - - - -

மாலை முன்றிற் குறுங்காற் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே.

(ஐங்குறுநூறு, 4.10)

(மாலை வேளையில் வீட்டு முற்றத்தில் குட்டையான காலையுடைய கட்டிலில் தன் மனேவி அருகே இருக்க, புதல்வன் தன் மார்பில் ஊரும் மிக்க மகிழ்ச்சியோடுள்ள பொழுதுக்கு ஏற்றபடி, மெல்ல உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழ் இருந்தது.

மகிழ்நகை-மிக்க மகிழ்ச்சி. ஒத்தன்று-பொருத்த மாக இருந்தது. மென் பிணித்து-மெல்லப் பிணிக்கின்ற தன்மையை உடையது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/215&oldid=613035" இலிருந்து மீள்விக்கப்பட்டது