பக்கம்:கன்னித் தமிழ்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது

தமிழ்த்தாயின் அணிகலங்களுள் காப்பியச் சுவை பல நிரம்பி விளங்கும் சிந்தாமணி, கற்றவர் உள்ளங்களைக் களிக்கச் செய்யும் சிறந்த நூல். பெரும் புலவர்கள் இந்தக் காப்பியக் கடலுள் துளைந்து விளையாடி இன்புற்றார்கள். பிற்காலத்தில் தமிழில் காப்பியங்களை இயற்றிய கவிஞர் அனைவரும், சிந்தா மணியை நன்றாக ஆராய்ந்து, அதன் சொல்லையும் பொருளையும் தம்முடைய நூல்களில் எடுத்து ஆண் டிருக்கின்றனர். . . . . . . . . *“ : :०~~’ • • • • ..--.९. , *** “

தமிழில் சுவைப் பிழம்பாய் விளங்கும் இராமா யணத்தைப் பாடிய கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர், சிந்தாமணியின் அமைப்பை நன்றாகக் கண்டு ஈடுபட் டார். சொல், பொருள், யாப்பு,அணி என்ற வகைகளில் சிந்தாமணியிலே கண்டவற்றை அவர் பொன்னே போலப் போற்றிப் பொதிந்துகொண்டார். சிந்தாமணி யைப் புதையலெடுத்தாற் போல எடுத்து அணி செய்து தமிழ் உலகில் உலவவிட்ட தமிழ்ப் பேராசிரியப் பிரானுகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள், சிந்தா மணியின் மூன்றாம் பதிப்பு முகவுரையிலே ஒரு செய்தி யைத் தெரிவித்திருக்கிறார்கள்: r -

“... .. இராமாயணத்தைக் கம்பர் அரங்கேற்றுகை யில், அள்ளிமீ துலகை வீசும்’ (விபீடணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/216&oldid=613038" இலிருந்து மீள்விக்கப்பட்டது