பக்கம்:கன்னித் தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

கன்னித் தமிழ்


தமிழ் நூல்களில் எத்தனை ஆர்வம் இருக்கிறதென்பது தெளிவாகும். ‘நல்ல தமிழ் நூல்களே வேண்டாம் என்ற நிலை வந்த பிறகு சூரியன் உதயமாவதைப் பற்றி நமக்கு என்ன கவலை?” என்றல்லவா அவர் சொல்கிறார்?

இங்கே அவர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நூல்களுள், சிந்தாமணி முதலில் நிற்கிறது. அதனை அடுத்துக் கம்பராமாயணம் வருகிறது. இரண்டும் காப்பியச் சுவையிலே சமானமாய் நிற்பவை என்று அவர் எண்ணினர் போலும் கம்பரையும் திருவள்ளு வரையும் தமிழுக்குக் கதி’ என்று சொல்வது ஒரு வழக்கு. தமிழ்க் காவிய உலகத்தில் கம்பரும் திருத் தக்கதேவரும் கதி என்று புதிய வழக்கு ஒன்றை நாம் புகவிட்டால், அது உண்மைக்கு மாறு ஆகாது.

கம்பர் சிந்தாமணியிலிருந்து பல சொற்களையும் சொற்றாெடர்களையும் முகந்துகொண் டி ரு க் கி ரு ர்; பொருளமைதியையும் காவிய மரபையும் எடுத்துக் கொண்டிருக்கிறார், இன்ன வகையான செய்திகளை t இன்ன வகையான செய்யுளில் சொல்லவேண்டு மென்பதையும் தெரிந்து அமைத்திருக்கிறார், பலபல உவமைகளை மொண்டு கொண்டிருக்கிறார். அவர் முகந்துகொண்டது ஓர் அகப்பையே என்றாலும், அது மிகமிகப் பெரிய அகப்பை அவர் தம்முடைய அக மாகிய பையையே அகப்பையாகக் கொண்டு முகந் திருக்கவேண்டும்! - -

அவர் முகந்து கொண்டவற்றை நூல்பிடித்துப் பார்த்து வரையறுப்பது எளிய காரியம் அன்று. ஆன லும் சிலசில உதாரணங்களால் கம்பருக்குச் சிந்தாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/218&oldid=1286060" இலிருந்து மீள்விக்கப்பட்டது