பக்கம்:கன்னித் தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது - - 21.1

எவ்வாறு உதவியாய் விளங்கியது என்பதைப் புலப் படுத்தலாம். -

2

முதலில் சொல்லைக் கவனிக்கலாம். ஐயரவர்கள் முகவுரைக் குறிப்பில் வெள்ளி வெண்’ என்ற பிர யோகத்தைச் சிந்தாமணிப் பிரயோகம் என்று ஒரு புலவர் கூறியதாகக் காட்டியிருக்கிறார்கள். வெள்ளி’ என்றாே வெண்மை என்றாே சொல்லாமல், இரண் டையும் சேர்த்துச் சொல்லியவர் திருத்தக்க தேவர். ‘மழைத் தாரைகள் வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோலைத் தொங்கவிட்டாற்போல் இருந்தன என் பது தேவர் கூறும் வருணனை. அங்கே,

... வெள்ளிவெண்

கோல் தி ரைத்தன போற்கொழுந் தாரைகள் என்கிறார்.

நாற்றிசையிலும் அருவி விழுகிறது. அதன் நீர் ஒழுக்கு வெள்ளிக் கம்பிகளைப் போல இருக்கிறதாம்.

வெள்ளி வெண்திரள் விசித்து:

என்று வருகிறது பாட்டு. இந்த வெள்ளி வெண்’ என்ற தொடரையே கம்பர் எடுத்து ஆண்டார். ‘இராமன் கடற்கரையில் குரங்குக் கூட்டத்திற்கு மத் தியில் இருந்தான். பாற்கடலில் பள்ளிகொண்டிருந் தவன் தேவர்கள் வேண்டத் துயிலெழுந்து அமர்ந் திருந்தவன் போல இருந்தது அந்தக் காட்சி என்று கம்பர் கூறுகிறார். . . . . - -

  • திரள் - கம்பி. விசித்து . கட்டி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/219&oldid=613049" இலிருந்து மீள்விக்கப்பட்டது