பக்கம்:கன்னித் தமிழ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

கன்னித் தமிழ்


வெள்ளிவெண் கடலின் மேஞள் .

விண்ணவர் தொழுது வேண்டப் பள்ளிதிர்ந் திருந்தான் என்னப்

பொலிதரும் பண்பி குண் என்பது பாட்டு.

‘நமர்’ என்பதற்கு நம்மவர்’ என்பது பொருள். நமர்களே அழைப்பதாயின், நமர்களே நமர்காள்’ என்று அழைப்பது இயல்பு. சிந்தாமணியில் முதல் முதலாக, நமரங்காள்’ என்ற விளியைத் திருத்தக்க தேவர் அமைத்தார். * : “. . . . . . . . .....,’s * 3

நம்குடித் தெய்வம் கண்டிர்

நமரங்காள்! அறிமின் (547) செல்வம் நமரங்காள்!

செய்தவமே நினைமின் கண்டிர் (2623) நம்பன்மின் செல்வம் நமரங்காள்!

நல்லறமே தினமின் கண்டிர் (3624)

என அச்சொல்லைச் சிந்தமாணியிலே கண்டார் கம்பர்;

தாகக் குன்றின் நின்றன காண்மின் நமரங்காள்! நளினக் காடே ஒப்பன காண்மின் நமரங்காள்! நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்! நடக்கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்! நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் நமரங்காள்! நாளின் முற்றா வெண்பிறை போலும் நமரங்காள்! நகரம் நோக்கிச் செல்வன காண்மின் நமரங்காள்! என்று களங்காண் படலத்தில் பல இடங்களில் அச் சொல்லைப் பெய்து கொண்டார். அப்பால் வந்தவ ராகிய குமர குருபரரும் இச் சொல்லை எடுத்தாண்ட துண்டு. - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/220&oldid=1286061" இலிருந்து மீள்விக்கப்பட்டது