பக்கம்:கன்னித் தமிழ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது 213

3

கற்பனை நயம் பெறச் செய்திகளைச் சொல்வ தில் தேவரும் கம்பரும் வல்லவர். சில கற்பனை களைத் தேவரிடமிருந்து கம்பர் பெற்றுத் தமது காவிய மாளிகையிலே பொருத்தியிருக்கிறார். -

உழவர் வயல்களில் வேலை செய்கின்றனர். சிலர் களை பறிக்கின்றனர். மற்றக் களையெல்லாம் களைந்தவர்கள், குவளையையும் தாமரையையும் தொட வில்லையாம். அவை தம் காதலிமார் கண் னை ப் போலவும் முகத்தைப் போலவும் இருந்தமையால் அவற்றைக் களையாமல் விட்டார்களாம். -

கண்ணெனக் குவளையுங் கட்டல் ஓம்பினர்; வண்ணவாண் முகமென மரையின் உள்புகார்; பண்னழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்;

தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே!

(கட்டல் - களை எடுத்தல். ஓம்பினர் - நீக்கினர். மரை - தாமரை.)

குவளை களைதலை நீங்கினர், அவை காதலிமார் கண்களைப் போன்று இருந்தமையால், தாமரையின் பக்கத்திலே கூடப் போகவில்லை, அவை தம் காதலி மார் வண்ணவாள் முகமெனத் தோன்றினமையால். குவளையையும் தாமரையையும் கண்டபோது அவை களைகள் என்ற நினைவையே மறந்து, தம் காதலிமார் அழகை நினைந்தனர். அந்த நினைப்பிலே அவர்கள் உள்ளத்தில் இன்பம் கொந்தளித்தது. பாடல்களை அந்த உற்சாகத்திலே பாடத் தொடங்கினர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/221&oldid=613060" இலிருந்து மீள்விக்கப்பட்டது