பக்கம்:கன்னித் தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

கன்னித் தமிழ்


மெல்லப் பாடினர்கள். இந்தக் காலத்துப் பாடகர்கள் கூட, வார்த்தைகளை விழுங்கிவிட்டு இராகத்தால் பூசி மெழுகுகிறார்களே; அப்படிப் பாடவில்லை. எழுத்தின் இயல் நன்றாக வெளிப்படும்படியாக, அட்சர சுத்தமாக, பண்களைப் பாடிப் பரப்பினர்கள். குளிர்ந்த வயலில் உள்ள உழவர்களின் இயல்பு இப்படிப்பட்டது. மலர்க் காட்சியும் மங்கையர் நினைப்பும் இனிய பாடலும் ஒன்றுபடும் இடமாக அந்தத் தண்வயல் விளங்கு கிறது. .

கம்பர் இந்தப் பாட்டைப் பார்த்தார். அவர் நாட்டுப் படலத்தில் மள்ளர்களைக் காட்டுகிறார், இந்தப் பாட்டின் கருத்தைப் பின்னும் கம்பர் விரிவாக்கினர். கோசல நாட்டு மள்ளர்கள் களை பறித்தலையே விட்டுவிட்டு நின்றார்களாம். அதற்கு இரண்டு காரணம்: ஒன்று, வயல் முழுவதும் குவளையும் தாமரையும் ஆம்பலுமாகவே நிற்கின்றன; அவை கடைசியருடைய கண்ணையும் கையையும் காலையும் முகத்தையும் வாயையும் நினை ப் பூ ட் டு கின்றன. இரண்டு, அவர்கள் காமத்தால் மயங்கி நின்றார்கள்; அதோடு கள் மயக்கமும் சேர்ந்து கொண்டது. அத ல்ை, எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்ற மாட்டாமல் மனம் மயங்கி நிற்கிறார்கள். சின்னப் புத்தி படைத்தவர்கள் காமத்தின் வயப் பட்டால் கடமையைச் செய்ய முடியுமா, என்ன? அவர்கள் எங்கே அதிலிருந்து பிழைக்கப் போகிறார்கள்? * கம்பர் இவ்வாறு வருணித்து, காமத்தைப் பெற்ற சிறியோர் உய்யமாட்டார் என்ற நீதியையும் இங்கே இணைத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/222&oldid=1286062" இலிருந்து மீள்விக்கப்பட்டது