பக்கம்:கன்னித் தமிழ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது 215.

பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகால் முகம்வாய் ஒக்கும்

களையலால் களையி லாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர்

களேகலா துலவி நிற்பார்; பெண்கள்பால் வைத்த நேயம்

பிழைப்பரோ சிறியர் பெற்றால்? (கடைசியர் - மள்ளருடைய மனேவிமார். இலாமை . இல்லாமல், உண். கள் வார் கடைவாய் - தாம் உண்ட கள் ஒழுகுகின்ற கடைவாயை உடைய மள்ளர் - உழவர். களே கலாது - களேயாமல்.)

பதுமை என்பவள் தூங்கிக் கொண்டிருந்தபோது சீவகன் அவளைப் பிரிந்து போய்விடுகிருன். கண் விழித்த பதுமை, தன் அரும்பெறற் காதலனைக் காணுமல் வருந்துகிருள்; கண்ட கண்ட பொருள் களை யெல்லாம் பார்த்துப் புலம்புகிருள்; கிளியையும் பூவையையும் அன்னத்தையும் மயிலையும் விளக்கையும் மாடத்தையும் விளித்து என்ன என்னவோ சொல் கிருள்.

மயிலைக் கண்டாள். அதன் தோகையிலேதான் எத்தனை கண்கள்! அவள் கயற் கண்ணினுள்; அந்தக் கண்ணை மூடித் தூங்கிப் போளுள். அப்போது சீவகன் பிரிந்து மறைந்தான். மயிலினுடைய கண், மூடாத கண் அல்லவா? அத்தனை கண்களில் ஒன்றா வது அவனைப் பார்த்திராதா? அவன் எந்த வழியாகப் போனன் என்று தெரிந்து கொண்டிராதா?-பாவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/223&oldid=613066" இலிருந்து மீள்விக்கப்பட்டது