பக்கம்:கன்னித் தமிழ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

கன்னித் தமிழ்


பதுமை பிரிவு பொருமல் இப்படி யெல்லாம் நினைக் கிருள். ‘மையில்லாத கண், மயிற் கண்; தூங்காத கண். மெய்யெல்லாம் அப்படிப் பல கண்களைப் படைத்தது மயில். அவற்றைக் கொண்டு உண்மை யைக் கண்டிருக்குமே! ஐயன் சென்ற இடத்தை அறிந்திருக்குமே! ஆம்! அதைக் கேட்டுக் கொண்டே ஒரு கும்பிடு போட்டாள் பதுமை. -

மையில் வாள் நெடுங் கண்வள ராதன மெய்யெ லாம்.உடையாய்! மெய்மை காண்டிநீ ஐயன் சென்று.ழிக் கூறுகென் முய்மயில் கையி ல்ைதொழு தாள்கயற் கண்ணினுள். (மை இல் - மை இல்லாத. வாள் - ஒளி, வளராதன. தூங்காதனவாகிய, காண்டி - பார்ப்பாய். சென்று பூமி - சென்றவிடத்தை. ஆய்மயில் - அழகையுடைய மயில்.

‘மயில் அத்தனை கண்களாலும் பார்த்திருக்கக் கூடுமே என்று பிரிவினுல் மயங்கிய ஒருத்தி கூறும் இதைக் கம்பர் கண்டார்; நல்ல இடத்தில் இதைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டு மென்று நினைத்தார். அவருடைய காவியத்திலேதான் இராமனும் சீதையும் பிரிந்து வாடும் கட்டங்கள் இருக்கின்றனவே! வேறு ஒரு கவிஞராயிருந்தால், சீதை வருந்துவதாக வரும் இடத்தில் இந்தப் பாட்டை அப்படியே தூக்கி வைத்து விடுவார். கம்பர் சாமர்த்தியசாலி, எதையும் புதுமெரு கேற்றிப் பொலிவூட்டுபவர். இராமன் சீதையைப் பிரிந்து வருந்துமிடத்தில் பல கண்களையுடைய மயிலைக் கொண்டு வந்தார். இராமன் அதைப் பார்க்கிருன். அது ஆயிரம் கண்களையுடையது; நிச்சயம் சீதை போகுமிடத்தைப் பார்த்தே இருக்கும். கம்பர். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/224&oldid=1286063" இலிருந்து மீள்விக்கப்பட்டது