பக்கம்:கன்னித் தமிழ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது . - 21?

பார்த்தாயா? சொல் என்று இராமன் சொன்னதாக அமைக்கவில்லை. அப்படி அமைத்தால், பதுமைக்குப் பதில் இராமன் சொல்வதாக இருப்பதை யன்றி மற்ற எல்லாம் ஒன்றாகவே இருக்குமே! ஆடவன் சொல் வதிலே பின்னும் நயம் காட்டலாம்’ என்று

எண்ணினர்.

மயில் ஆடுகிறது; சீதை சென்றதை ஆயிரங் கண்களால் பார்த்தும் அது இப்படிச் சிந்தை உவந்து ஆடுவ தற்குக் காரணம் என்ன? சீதைக்கும் மயிலுக்கும் பகை உண்டு. ஆம்! முன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஒடும்; அவளுடைய சாயலைக் கண்டு, இந்தச் சாயல் நமக்கு இல்லையே! என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும். இப் போது சிந்தை உவந்து ஆடுகின்றது. இராமன் தன் உயிர் போன்ற சீதையைத் தேடிக்கொண்டிருக்கிருன். மயில் நினைத்தால் உண்மையைச் சொல்லலாம். ஏனென்றால், அது நிச்சயமாக அவளைக் கண்டிருக் கிறது. ஆயிரங் கண்ணுடைய அதற்குத் தெரியாமல் ஒளிந்து போக முடியுமா? .

இராமன் கூற்றாக வைத்து, இத்தனை எண்ணங் களையும் அவன் வெளிப்படுத்துவதாகக் கம்பர் பம்பைப் படலத்தில் பாடுகிறார்:

ஓடா நின்ற களிமயிலே!

சாயற்கு ஒதுங்கி உள்ளழிந்து

கூடாதாரின் திரிகின்ற

நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/225&oldid=613072" இலிருந்து மீள்விக்கப்பட்டது