பக்கம்:கன்னித் தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

கன்னித் தமிழ்


தேடா நின்ற என்உயிரைத்

தெரியக் கண்டாய் சிந்தைஉவந்து ஆடா நின்றாய் ஆயிரங்கண்

உடையாய்க்கு ஒளிக்கு மாறுண்டோ?

(ஒடாகின்ற - முன்பெல்லாம் ஒடுகின்ற. அழிந்து - வருந்தி. கூடாதாரின் - பகைவரைப் போல. உடை யாய்க்கு - உடைய உனக்கு.)

אד காவியங்களில் முதலில் மழையைப் பற்றிக் கூறி, மழை பெய்ய நீர்மல்கி அருவி பாய்ந்து ஆருகி, ஆற்று வெள்ளம் பாய்ந்து வயல் வளம் பெறுவதாக அமைப் பது மரபு. இந்த மரபுக்கு வழி காட்டியவர் திருத்தக்க தேவர். கம்பர் அதனை விரிவாக அமைத்தார். அப்படியே திணை வருணனையும் திணை மயக்கமும் காவியத்தில் அமைவதைச் சிந்தாமணியில் முதலில் காணலாம். காப்பிய நாயகனுக்கும் நாயகிக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலைச் சிந்தாமணி பல இடங்களில் காட்டும்; கம்பரும் காட்டுகிறார்.

உயர் நிலையில் வாழும் தலைவிமார்களுக்கு வினை வல பாங்கினராகக் கூன், குறள், சிந்து என்ற விகார உருவத்தினர் இருப்பதாகப் பழைய நூல்கள் கூறும். பெருங்கதையாசிரியர் அதை அமைத்திருக்கிறார், சிந்தாமணியிலும் வருகிறது; கம்பரும் சொல்கிறார், ஆனல் சிந்தாமணியிலும் இராமாயணத்திலும் தலைவி புறப்படுகையில் இந்தக் கூட்டத்தினர் உடன் வருகின்றனர். -

காந்தருவ தத்தை அழகாக அலங்காரஞ் செய்து கொண்டு புறப்படுகிருள். அவளுடன் குறளும் சிந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/226&oldid=1286064" இலிருந்து மீள்விக்கப்பட்டது