பக்கம்:கன்னித் தமிழ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது 219;

வந்தனவாம். குறள், மிகக் குட்டையான வடிவம்: அதைவிடச் சிறிது உயர்ந்தது சிந்து. அவை கையை வீசி நடப்பது தேரை நடப்பது போல இருந்ததாம்.

ஆரம் துயல்வா அந்துகில் சோர்தர வீரம் மடக்கையை மெய்வழி வீசித் தேரை நடப்பன போற்குறள் சிந்தினெ டோரும் நடந்தன. ஒண்டொடி முன்னே. (ஆரம் துயல்வர - முத்து மாலே அசைய. துகில் - ஆடை ஒரும்: அசை. ஒண்டொடி - காந்தருவதத்தை.1

இராமாயணத்தில், சீதை திருமண மண்டபத். துக்கு வருகிருள். தோழிமார் புனைந்த அணிகளும் மணிகளும் ஆடையும் அழகு செய்ய நடந்து வருகிருள். அப்போது சிந்து குறள் கூன் ஆகிய கூட்டங்கள் வந்து பணிகின்றன; அவளுடன் வருகின்றன.

சிந்தொடு குறளும் கூனும்

சிலதியர் குழாமும் தெற்றி வந்தடி வணங்கிச் சுற்ற

மணியணி விதான நீழல் இந்துவின் கொழுந்து விண்மீன்

இனத்தொடும் வருவ தென்ன நந்தலில் விளக்க மன்ன -

நங்கையும் நடக்க லுற்றாள். . .. (கோலங்காண். 23.): (சிலதியர் ஏவல் மகளிர். குழாம் கூட்டம்.தெற்றி - நெருங்கி, இந்து-சந்திரன். விண்மீன்.நட்சத்திரம். நந்தல் இல் விளக்கம் - அவியாத விளக்கு.1 - - -

இராமன் நகர் நீங்கிய பிறகு அயோத்தி நகரம் ஜீவனற்றுக் கிடந்ததைக் கம்பர் சோகச் சுவை சொட்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/227&oldid=613080" இலிருந்து மீள்விக்கப்பட்டது