பக்கம்:கன்னித் தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

கன்னித் தமிழ்


டச் சொட்டப் பாடுகிறார். சிந்தாமணியில் முத்தியிலம் பகத்தில் சீவகன் துறவை மேற்கொண்டபோது நகரம் பொலிவழிந்திருந்ததைத் தேவர் வருணிக் கிறார், இரண்டிலும் பல கருத்துக்கள் ஒத்து நடப் பதைக் காணலாம்.

இன்ன சுவையுள்ள பகுதிக்கு இன்ன வகையான செய்யுள் பொருத்தமாக இருக்கும் என்று ஆய்ந்து அமைப்பது பெருங் கவிஞருக்கு இயல்பு. அந்த வகையிலும் சிந்தாமணியைக் கண்டு கம்பர் அமைத்த இடம் சில உண்டு. கம்பர் பின்னும் நுணுக்கமாக அமைத்தவற்றைப் பிற்காலக் கவிஞர்கள் கடன் கொண்டு அமைத்திருக்கிறார்கள். W -

சீவகனப் பிரிந்த பதுமை, அருகிலுள்ள பொருள் களை யெல்லாம் பார்த்துப் புலம்புகிருள்.

திரைவி ழருவிந் நிமிர்பொன் சொரியும் வரையே! புனலே வழையே! தழையே! விரையார் பொழிலே! விரிவெண் ສາກົao3 ນ ! உரையீர் உயிர்கா வலனுள் வழியே * என்பது போன்ற கலி விருத்தங்களைத் திருத்தக்க தேவர் அங்கே அமைக்கிறார். கவிச் சக்கரவர்த்தி கம்பரும், சீதை இராவணல்ை சிறையெடுக்கப் பெற் றுச் செல்லும்போது இந்தச் சந்தத்தில் அமைந்த கலி விருத்தங்களையே ஆளுகிறார்.

  • வரிசையாக விழும் அருவியானது ஒளி ஒங்கும் பொன்னைச் சொர்வதற்கு இடமான மலேயே, நீரே, சுரபுன்னேயே, மரங்களின் தழையே, வாசனை கொண்ட சோலேயே, விரிந்த வெள்ளிய கிலாவே, என் உயிருக்குக் காவலனுகிய சீவகன் இருக்கும் இடத்தைச் சொல்விசாக,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/228&oldid=1286065" இலிருந்து மீள்விக்கப்பட்டது