பக்கம்:கன்னித் தமிழ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

கன்னித் தமிழ்


கூறினர். கம்பர் அதைப் பின்னும் விளக்குபவர்போல, “பூரியர்’ என்ற கூறிவிட்டார். அதோடு இரண்டு ஒலிகளுக்கும் பொதுவான லட்சணங்களையும் விரித் திருக்கிறார். கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதவை, ஒன்றுபோல ஒன்று அமையாதவை, சோர்வில்லாமல் சதா கேட்பவை-பாமரர் பேச்சுக்கள். அதுவும் பதி னெட்டு மொழிகள் பேசும் பெருங்கூட்டத்துப் பேச்சுகள் இப்படித்தானே இருக்கும்? பறவைகளின் ஒலியும் இப்படித்தான் இருக்கும் என்பதையும், நாம் அறிவோம்.

போர் நடக்கிறது. குதிரை இங்கும் அங்கும் சென்று சுழன்று வருகிறது.

கூட்டுற முறுக்கி விட்ட

குயமகன் திகிரி போல வாள்திறல் தேவ தத்தன்

கலினமா

திரியும் அன்றே (786) என்று குலாலனது சக்கரத்தை உவமை கூறினர் தேவர். மிதிலையிலே வரும் கலினப் பாய் மாவும் (கடிவாளத்தையுடைய குதிரை) குலாலன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போலவே வந்தன என்கிறார் கம்பர். .

கொட்புறு கலினப் பாய்மா

குலால் மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல

姆 வருவ

என்பது கம்பர் வாக்கு. முடுக்கி விட்ட என்ற பாடம்

வழங்கிலுைம், முறுக்கிவிட்ட என்ற பாடம் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/232&oldid=1286067" இலிருந்து மீள்விக்கப்பட்டது