பக்கம்:கன்னித் தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது &&5

இருக்க வேண்டுமென்பது சிந்தாமணிப் பாட்டைக் கொண்டு பார்த்தால் தெரியவில்லையா? ------ ----- - -

சந்திரோதயம் ஆகின்றது. இருட்டிலே கைவிளக் கெடுத்தாற் போலச் சந்திரன் தோன்றுகிறதாம்.

ஏறனுற் கிருளே நீங்கக்

கைவிளக் கேந்தி யாங்கு வீறுயர் மதியம் தோன்ற (1542) என்பது சிந்தாமணி.

..................வானம்

கைவிளக் கெடுத்த தென்ன வந்தது கடவுட் டிங்கள்

(தைலமாட்டு. 49) என்பது இராமாயணம்.

செல்வம் நிலையாமையைத் திருத்தக்க தேவர் கூற வருகிறார், அதற்கு விளக்கை உவமை கூறுகிறார், அதே உவமையைக் கம்பர் வாழ்க்கை நிலையாமைக்குக்

காட்டுகிறார்.

புரிமுத்த மாலைப் பொற்கோல்

- விளக்கினுட் பெய்த நெய்யும்

திரியுஞ்சென் றற்ற போழ்தே

} திருச்சுடர் தேம்பி னல்லால்

எரிமொய்த்துப் பெருக லுண்டோ?

இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமற் செல்வம்

பற்றியார் அதன் வைப்பார்? (2315)

என்பது திருத்தக்க தேவர் வாக்கு.

- 15 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/233&oldid=613103" இலிருந்து மீள்விக்கப்பட்டது