பக்கம்:கன்னித் தமிழ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

கன்னித் தமிழ்


புண்ணிய நறுநெயிற் பொருவில் காலமாம் திண்ணிய திரியினில் விதியென் தீயினில் எண்ணிய விளக்கு,அவை இரண்டும் எஞ்சிகுல் அண்ணலே அவிவதற் கையம் யாவதோ?

என்பது கம்பர் வாக்கு.

- இரண்டிலும் நெய்யும் திரியும் ஆகிவிட்டால் அவிகின்ற விளக்கைக் காண்கிருேம். புண்ணியம் பாவம் என்ற இரண்டை நெய்யும் திரியுமாகச் சொன் ஞர் தேவர். கம்பரோ, புண்ணியத்தையும் காலத் தையும் நெய்யாகவும் திரியாகவும் சொன்னர். அங்கே அவிகின்ற விளக்கு, செல்வம்; இங்கே அவிகின்ற விளக்கு, வாழ்க்கை. இரண்டிடத்திலும் திருச்சுடர் தேம்புகிறது; விளக்கு அவிகிறது. இந்த உவ்மை யினிடையே தேவர் வாக்கைக் கம்பர் அறிந்து பயன் படுத்திக் கொண்டார் என்ற செய்தி அவியாது விளக்க முறுகிறது.

தேவர் படைத்த சிந்தாமணி விருந்துப் பானையில் கம்பர் இவ்வாறு மொண்டு கொண்டவை பல. இவை சில உதாரணங்கள். இவற்றைப் பார்த்தாலே கம்பர் முகந்து கொண்ட அகப்பை மிகப் பெரிது என்பது தோன்றவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/234&oldid=1286068" இலிருந்து மீள்விக்கப்பட்டது